Upon establishing this blog, I endeavored to select an appropriate name, only to discover that it had already been claimed by someone else. Undeterred, I contemplated the inherent sweetness associated with the term "dairy" and found resonance with the delightful nature of Postcrossing. Consequently, I crafted the page under the title "Postcrossing Dairy." Please refrain from interpreting this choice as an error or typographical mistake.
Saturday, December 18, 2021
A Special cover on "Voice of Liberation"
Wednesday, December 15, 2021
Stamp on 50th anniversary of Swarnim Vijay Diwas
Rajnath Singh issues commemorative postage stamp on the occasion of 50th anniversary of ‘Swarnim Vijay Diwas’ at National War Memorial in New Delhi on 16 Dec 2021.
#VijayDiwas2021
Tuesday, December 14, 2021
பழனி பஞ்சாமிர்தத்திற்கு தபால் சிறப்பு உறை வெளியீடு
புவிசார் குறியீடு பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. பழனி முருகன் கோவில் என்றாலே பஞ்சாமிர்தம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பழனி பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
அதேபோல் கொடைக்கானல் மலைப்பூண்டு, விருப்பாட்சி மலை வாழைப்பழம், திண்டுக்கல் பூட்டு உள்ளிட்டவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதற்கிடையே தபால் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு, விருப்பாட்சி மலை வாழைப்பழம், திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் பழனி பஞ்சாமிர்தத்திற்கான சிறப்பு தபால் உறை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். தபால் துறையின் திண்டுக்கல் கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜ், உதவி கண்காணிப்பாளர் ராஜா, கோவில் மேலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜ் ஆகியோர் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கான சிறப்பு தபால் உறையை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பழனி தலைமை தபால் அலுவலர் திருமலைசாமி உள்பட தபால் துறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நன்றி: தினதந்தி, தினமலர்
Wednesday, December 1, 2021
75th Anniversary of the Mahindra Group
Hon'ble Minister of State for Communications, Mr Devusinh Chauhan released a commemorative stamp in the presence of Mr Anand Mahindra, marking 75th Anniversary of the Mahindra Group through a virtual ceremony on 1 December 2021.
(Via India Post Twitter page)
Monday, November 1, 2021
Friday, October 1, 2021
போஸ்ட்கிராசிங்கின் தூண்கள்
நிக்கி (shanaqui)– ஐக்கிய இராச்சியம்
நிக்கி இங்கிலாந்தில் இருந்து போஸ்ட்கிராசிங்கிற்கு ஆதரவு வழங்குவதோடு அதன் பராமரிப்பு பணிகளுக்கும் உதவி வருகிறார். புத்தகங்களை தனது சுவாமாக எண்ணுகிறார். அதற்காக தனியாக ஒரு இணைய தளத்தினை நடத்திவருகிறார். நீங்களும் அவருக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பிவைக்கலாம். தற்பொழுது முயல்களை வளர்த்து வருகிறார். பல்வேறு பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுள்ளார். இதுவரை மூன்று பட்டங்ளைப் பெற்றுவிட்டு இன்னும் தொடர்ந்து படித்துவருகிறார்!.
ஓல்கா (kelpie) - ரஷ்யா
ரஷ்ய மொழி பேசும் போஸ்ட்கிரார்களை
இணைக்க ஓல்கா உதவிவருகிறார். இவருக்கு திமிங்கலங்கள் மிகவும் பிடிக்கும். குக்கி எனும் கார்டூன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்.
உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்
அஞ்சலட்டைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அப்படி மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு உதவிகளை போஸ்ட்கிராசிங்கிற்கு தொடர்ந்து செய்துவருகின்றனர். பல தன்னார்வலர்களும் பல்வேறு பணிகளைப் பகிர்ந்து செய்து உதவி வருகின்றனர். போஸ்ட்கிராசிங்கில் பல்வேறு குழுக்கள் இயங்கி வருகின்றன. பல தன்னார்வலகளின் விலைமதிப்பற்ற உதவியுடன் அது பராமரிக்கப்படுகிறது - அவர்களைப் பற்றிய விபரங்களை ‘குழு’ (forum) பற்றிய பக்கத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம்.
குட்டி அஞ்சல் தூதர்கள் (Little Mail Carriers)
போஸ்ட்மேன் பாலோ மற்றும் போஸ்ட் வுமன் அனா ஆகியோர் உலகின் ஏதோ ஒரு நாட்டிற்கு சிறிய பொம்மை வடிவில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் போஸ்ட்கிராசிங்கின் குட்டி-தூதர்கள் எனலாம். தொடர்ந்து இந்த கரோனா காலத்திலும் உலகெங்கிலும் பயணம் செய்தார்கள். முடிந்தவரை உலகெங்குமுள்ள போஸ்ட்கிராஸர்களைப் பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர்! வலைப்பதிவில் இவர்களின் சாகசங்களைப் தொடர்ந்து பார்க்கலாம்.
Photo credits: Postcrossing Website and https://breathesbooks.com/
Wednesday, September 1, 2021
போஸ்ட்கிராசிங் ஃபாரத்தின் இயக்குநர்
விக்கி கிராஃபோர்ட் (Mundoo) - ஆஸ்திரேலியா
போஸ்ட்கிராசிங்கின் மற்றும் ஒரு மிக முக்கிய ஆலோசகர் விக்கி. போஸ்ட்கிராசிங் ஃபாரம் (forum) சிறப்பாக இயங்க உதவி வருகிறார். போஸ்ட்கிராசிங் எந்தவித தோய்வும் இல்லாமல் சீராக இயங்குவதை கண்காணித்து வருகிறார். இவர் ஜியோகாச்சிங்கிலும் செயல்பட்டு வருகிறார். விடுமுறையில் ஹிண்ட்மார்ஷ் தீவில் சூரிய உதயங்களை புகைப்படம் எடுக்க விரும்புவதில் ஆர்வம் கொண்டவர்.
-
India Post is proud to announce the release of a Permanent Pictorial Cancellation on 6th February 2025 at 10:00 AM. The event will be graced...
-
In anticipation of the upcoming TANAPEX 2025 philatelic exhibition, the Philatelic Bureau located on Anna Salai in Chennai is currently host...
-
த மிழ்நாடு முழுவதும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களை உற்சாகப்படுத்தும் TANAPEX 2025 நிகழ்வு சென்னையில் ஜனவரியில் நடைபெற உள்ள இந்த சிறப்பு தருணத்த...