Showing posts with label தபால்தலை. Show all posts
Showing posts with label தபால்தலை. Show all posts

Monday, May 5, 2025

தபால்தலை சேகரிப்பு மற்றும் போஸ்ட்கிராசிங் - கோடைக்கால பயிற்சி முகாம்

சென்னை மயிலாப்பூரில் தபால்தலை சேகரிப்பு மற்றும் போஸ்ட்கிராசிங் குறித்த கோடைக்கால பயிற்சி முகாமினை போஸ்டலி ஹட் மற்றும் மெட்ராஸ் போஸ்ட்கிராசிங் கம்யூன் இணைந்து நடத்தி வருகிறது.


தபால்தலை சேகரிப்பு மற்றும் போஸ்ட்கிராசிங் குறித்த 5 நாள் கோடைக்கால பயிற்சி முகாமில் மூன்றாம் வாரமாக, மே 11, 2025 அன்று "அஞ்சல் தலைகளைக் கண்டறிவோம்" என்ற தலைப்பிலான இந்த இலவச பயிற்சி முகாம் அனைத்து வயதினருக்குமானதாகும். இது சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வர ராவ் பூங்கா, லஸ் அவென்யூ, முகவரியில் உள்ள செஸ் சதுக்கத்தில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும்.


இந்த பயனுள்ள தகவலை வெளியிட்ட KYN-க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தபால்தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய இணைப்பு கருத்துப்பெட்டியில் உள்ளது.


#

Friday, October 1, 2021

போஸ்ட்கிராசிங்கின் தூண்கள்

 நிக்கி (shanaqui)– ஐக்கிய இராச்சியம்

நிக்கி இங்கிலாந்தில் இருந்து போஸ்ட்கிராசிங்கிற்கு ஆதரவு வழங்குவதோடு அதன் பராமரிப்பு பணிகளுக்கும் உதவி வருகிறார். புத்தகங்களை தனது சுவாமாக எண்ணுகிறார். அதற்காக தனியாக ஒரு இணைய தளத்தினை நடத்திவருகிறார். நீங்களும் அவருக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பிவைக்கலாம். தற்பொழுது முயல்களை வளர்த்து வருகிறார். பல்வேறு  பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுள்ளார். இதுவரை மூன்று பட்டங்ளைப் பெற்றுவிட்டு இன்னும் தொடர்ந்து படித்துவருகிறார்!.

ஓல்கா (kelpie) - ரஷ்யா

ரஷ்ய மொழி பேசும் போஸ்ட்கிரார்களை இணைக்க ஓல்கா உதவிவருகிறார். இவருக்கு திமிங்கலங்கள் மிகவும் பிடிக்கும். குக்கி எனும் கார்டூன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்.

 

 

உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

அஞ்சலட்டைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அப்படி மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு உதவிகளை போஸ்ட்கிராசிங்கிற்கு தொடர்ந்து செய்துவருகின்றனர். பல தன்னார்வலர்களும் பல்வேறு பணிகளைப் பகிர்ந்து செய்து உதவி வருகின்றனர். போஸ்ட்கிராசிங்கில் பல்வேறு குழுக்கள் இயங்கி வருகின்றன. பல தன்னார்வலகளின் விலைமதிப்பற்ற உதவியுடன் அது பராமரிக்கப்படுகிறது - அவர்களைப் பற்றிய விபரங்களை ‘குழு’ (forum) பற்றிய பக்கத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம்.

குட்டி அஞ்சல் தூதர்கள் (Little Mail Carriers)

போஸ்ட்மேன் பாலோ மற்றும் போஸ்ட் வுமன் அனா ஆகியோர் உலகின் ஏதோ ஒரு நாட்டிற்கு சிறிய பொம்மை வடிவில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் போஸ்ட்கிராசிங்கின் குட்டி-தூதர்கள் எனலாம். தொடர்ந்து இந்த கரோனா காலத்திலும் உலகெங்கிலும் பயணம் செய்தார்கள். முடிந்தவரை உலகெங்குமுள்ள போஸ்ட்கிராஸர்களைப் பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர்! வலைப்பதிவில் இவர்களின் சாகசங்களைப் தொடர்ந்து பார்க்கலாம்.

Photo credits: Postcrossing Website and https://breathesbooks.com/

Wednesday, September 1, 2021

போஸ்ட்கிராசிங் ஃபாரத்தின் இயக்குநர்

 


விக்கி கிராஃபோர்ட் (Mundoo) - ஆஸ்திரேலியா

போஸ்ட்கிராசிங்கின் மற்றும் ஒரு மிக முக்கிய ஆலோசகர் விக்கி. போஸ்ட்கிராசிங் ஃபாரம் (forum) சிறப்பாக இயங்க உதவி வருகிறார். போஸ்ட்கிராசிங் எந்தவித தோய்வும் இல்லாமல் சீராக இயங்குவதை கண்காணித்து வருகிறார். இவர் ஜியோகாச்சிங்கிலும் செயல்பட்டு வருகிறார். விடுமுறையில் ஹிண்ட்மார்ஷ் தீவில் சூரிய உதயங்களை புகைப்படம் எடுக்க விரும்புவதில் ஆர்வம் கொண்டவர்.

Wednesday, June 30, 2021

போஸ்ட்கிராசிங்கின் நிறுவனர்

 


போஸ்ட்கிராசிங்கின் பிதாமகன் பாலோ மாகல்ஹீஸ் (பவுலோ) - போர்ச்சுகல்

பவுலோக்கு நிறைய கடிதங்களை உலகம் முழுவதும் இருந்து பெறுவதற்கு மிகுந்த ஆர்வம். ஆனால் யார் தொடர்ந்து அனுப்புவார்கள். அதற்கு ஒரு தீர்வு காண விரும்பினார். அவரின் ஒரு சிறிய யோசனை இன்று ஆறு கோடி அஞ்சல் அட்டைகள் பயணமாவதற்கு காரணமாக இருந்துள்ளார். இப்போது இவர் இந்த போஸ்ட்கிராசிங் திட்டத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காவும் முழுநேரமாக பயணிக்கிறார். கம்ப்யூட்டரில் முன் உட்காராத நிலையில் புதையல்களைத் தேடுவதில் நேரத்தினை செலவு செய்கிறார்.

Sunday, May 23, 2021

யூரோபா அஞ்சல்தலைப் போட்டி 2021

இந்த ஆண்டின் மிக அழகான யூரோபா அஞ்சல் தலையைத் தேர்வு செய்யத் வாக்களிப்பு தொடங்கியது!

யூரோபா தபால்தலை என்பது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் (1956-1959) அஞ்சல் துறைகளால் பொதுவான வடிவமைப்பு அல்லது கருப்பொருளைக் கொண்ட அஞ்சல் தலைகளை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. இது 1992 வரை யூரோபா - சிஇபிடி என்றும் அழைக்கப்பட்டது.

இந்த ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழியும் ஆபத்தில் உள்ள தேசிய வனவிலங்குகளை மையப்படுத்தி அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு தேவையான மிக முக்கியமான தலைப்பாக இது கருதப்படுகிறது. காடுகள் அழிப்பு மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் இங்குள்ள விலங்குகள், பூஞ்சை மற்றும் தாவரங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது. மேலும் ஐ.யூ.சி.என் (IUCN) எச்சரிக்கை பட்டியலின் படி, ஐரோப்பாவில் தற்போது 20%க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. இது ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் சோகமான தகவலாகும். எனவே 2021ஆம் ஆண்டில், ஒவ்வொரு நாடும் ஆழிந்துவரும் உயிரினங்களைத் தேர்ந்தெடுத்து, அதை அஞ்சல் தலைகளாக வெளியிட்டுள்ளன. இங்கே அந்த அஞ்சல் தலைகளின் ஒரு சிறிய மாதிரி உங்கள் பார்வைக்காக:

 Photo Source: https://www.postcrossing.com

எல்லா அளவுகள் மற்றும் வடிவங்களிலும் விலங்கினங்களின் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளனர். அவை பெரும்பாலும் பாரம்பரிய தபால்தலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் அனைவருக்கும் கடினமானதே, ஏனென்றால் தவிர்க்க முடியாமல் அழகான விலங்குகளுக்கே அனைவரும் வாக்களிப்பார்கள்..

போஸ்ட்கிராசர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்த ஆண்டின் போட்டியில் எந்த முத்திரைக்கு 2021இன் சிறந்த யூரோபா அஞ்சல் தலைக்கான வாக்குகளை கொடுப்பார்கள்? தபால்தலை குறித்த உங்களின்  கருத்துக்களைக் அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள், எனவே உடனே நீங்களும் வாக்களித்து, நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை எங்களுக்கும் கருத்துப் பெட்டியில் தெரியப்படுத்துங்கள்!

2022 ஆம் ஆண்டின் கருப்பொருள்:  "கதைகள் & புராணக்கதைகள்"

தகவல் உதவி: https://www.postcrossing.com

Monday, May 17, 2021

முதல் போஸ்ட்கிராசிங் அஞ்சல் தலை

போஸ்ட்கிராசிங்கின் முதல் அஞ்சல் தலை வெளியீடு

2011, அக்டோபர் 14 ஆம் தேதி, போஸ்ட்என்எல் அஞ்சல் தலையை வெளியிட்டது, இது போஸ்ட்கிராசிங் தொடர்பாக வெளியாகும முதல் அஞ்சல் தலையாகும்! இது எவ்வளவு அருமையான செய்தி?

என்னைப் பொறுத்தவரை, இந்த திட்டம் ஒரு அஞ்சல் தலையில் இடம்பெறுவதற்கு தகுதியானது என்று கருதப்படுகிறது. இது ஒரு பெரிய மரியாதை, மேலும் இந்த கனவை நனவாக்கிய போஸ்ட்என்எல் (டச்சு அஞ்சல் சேவை)க்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். போஸ்ட் கிராஸர் ரேமண்ட்68 க்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் - அவரது விடாமுயற்சியால் தான் இந்த போஸ்ட்கிராசிங் அஞ்சல் தலை அன்று வெளியானது.


 

Handlooms of India

India Post has officially immortalized the nation’s rich textile legacy with a stunning set of four commemorative postage stamps dedicated t...