இந்த ஆண்டின் மிக அழகான யூரோபா அஞ்சல் தலையைத் தேர்வு செய்யத் வாக்களிப்பு தொடங்கியது!
யூரோபா தபால்தலை என்பது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் (1956-1959) அஞ்சல் துறைகளால் பொதுவான வடிவமைப்பு அல்லது கருப்பொருளைக் கொண்ட அஞ்சல் தலைகளை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. இது 1992 வரை யூரோபா - சிஇபிடி என்றும் அழைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழியும் ஆபத்தில் உள்ள தேசிய வனவிலங்குகளை மையப்படுத்தி அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு தேவையான மிக முக்கியமான தலைப்பாக இது கருதப்படுகிறது. காடுகள் அழிப்பு மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் இங்குள்ள விலங்குகள், பூஞ்சை மற்றும் தாவரங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது. மேலும் ஐ.யூ.சி.என் (IUCN) எச்சரிக்கை பட்டியலின் படி, ஐரோப்பாவில் தற்போது 20%க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. இது ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் சோகமான தகவலாகும். எனவே 2021ஆம் ஆண்டில், ஒவ்வொரு நாடும் ஆழிந்துவரும் உயிரினங்களைத் தேர்ந்தெடுத்து, அதை அஞ்சல் தலைகளாக வெளியிட்டுள்ளன. இங்கே அந்த அஞ்சல் தலைகளின் ஒரு சிறிய மாதிரி உங்கள் பார்வைக்காக:
எல்லா அளவுகள் மற்றும் வடிவங்களிலும் விலங்கினங்களின் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளனர். அவை பெரும்பாலும் பாரம்பரிய தபால்தலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் அனைவருக்கும் கடினமானதே, ஏனென்றால் தவிர்க்க முடியாமல் அழகான விலங்குகளுக்கே அனைவரும் வாக்களிப்பார்கள்..
போஸ்ட்கிராசர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்த ஆண்டின் போட்டியில் எந்த முத்திரைக்கு 2021இன் சிறந்த யூரோபா அஞ்சல் தலைக்கான வாக்குகளை கொடுப்பார்கள்? தபால்தலை குறித்த உங்களின் கருத்துக்களைக் அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள், எனவே உடனே நீங்களும் வாக்களித்து, நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை எங்களுக்கும் கருத்துப் பெட்டியில் தெரியப்படுத்துங்கள்!
2022 ஆம் ஆண்டின் கருப்பொருள்: "கதைகள் & புராணக்கதைகள்"
தகவல் உதவி: https://www.postcrossing.com