Friday, October 1, 2021

போஸ்ட்கிராசிங்கின் தூண்கள்

 நிக்கி (shanaqui)– ஐக்கிய இராச்சியம்

நிக்கி இங்கிலாந்தில் இருந்து போஸ்ட்கிராசிங்கிற்கு ஆதரவு வழங்குவதோடு அதன் பராமரிப்பு பணிகளுக்கும் உதவி வருகிறார். புத்தகங்களை தனது சுவாமாக எண்ணுகிறார். அதற்காக தனியாக ஒரு இணைய தளத்தினை நடத்திவருகிறார். நீங்களும் அவருக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பிவைக்கலாம். தற்பொழுது முயல்களை வளர்த்து வருகிறார். பல்வேறு  பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுள்ளார். இதுவரை மூன்று பட்டங்ளைப் பெற்றுவிட்டு இன்னும் தொடர்ந்து படித்துவருகிறார்!.

ஓல்கா (kelpie) - ரஷ்யா

ரஷ்ய மொழி பேசும் போஸ்ட்கிரார்களை இணைக்க ஓல்கா உதவிவருகிறார். இவருக்கு திமிங்கலங்கள் மிகவும் பிடிக்கும். குக்கி எனும் கார்டூன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்.

 

 

உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

அஞ்சலட்டைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அப்படி மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு உதவிகளை போஸ்ட்கிராசிங்கிற்கு தொடர்ந்து செய்துவருகின்றனர். பல தன்னார்வலர்களும் பல்வேறு பணிகளைப் பகிர்ந்து செய்து உதவி வருகின்றனர். போஸ்ட்கிராசிங்கில் பல்வேறு குழுக்கள் இயங்கி வருகின்றன. பல தன்னார்வலகளின் விலைமதிப்பற்ற உதவியுடன் அது பராமரிக்கப்படுகிறது - அவர்களைப் பற்றிய விபரங்களை ‘குழு’ (forum) பற்றிய பக்கத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம்.

குட்டி அஞ்சல் தூதர்கள் (Little Mail Carriers)

போஸ்ட்மேன் பாலோ மற்றும் போஸ்ட் வுமன் அனா ஆகியோர் உலகின் ஏதோ ஒரு நாட்டிற்கு சிறிய பொம்மை வடிவில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் போஸ்ட்கிராசிங்கின் குட்டி-தூதர்கள் எனலாம். தொடர்ந்து இந்த கரோனா காலத்திலும் உலகெங்கிலும் பயணம் செய்தார்கள். முடிந்தவரை உலகெங்குமுள்ள போஸ்ட்கிராஸர்களைப் பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர்! வலைப்பதிவில் இவர்களின் சாகசங்களைப் தொடர்ந்து பார்க்கலாம்.

Photo credits: Postcrossing Website and https://breathesbooks.com/

Wednesday, September 1, 2021

போஸ்ட்கிராசிங் ஃபாரத்தின் இயக்குநர்

 


விக்கி கிராஃபோர்ட் (Mundoo) - ஆஸ்திரேலியா

போஸ்ட்கிராசிங்கின் மற்றும் ஒரு மிக முக்கிய ஆலோசகர் விக்கி. போஸ்ட்கிராசிங் ஃபாரம் (forum) சிறப்பாக இயங்க உதவி வருகிறார். போஸ்ட்கிராசிங் எந்தவித தோய்வும் இல்லாமல் சீராக இயங்குவதை கண்காணித்து வருகிறார். இவர் ஜியோகாச்சிங்கிலும் செயல்பட்டு வருகிறார். விடுமுறையில் ஹிண்ட்மார்ஷ் தீவில் சூரிய உதயங்களை புகைப்படம் எடுக்க விரும்புவதில் ஆர்வம் கொண்டவர்.

Saturday, July 31, 2021

போஸ்ட்கிராசிங் இணைய தளத்தின் எடிட்டர்


 

அனா காம்போஸ் (meiadeleite) - போர்ச்சுகல்

போஸ்ட்கிராசிங் இணைய தளத்தினை எந்த ஒரு தோய்வுமில்லாமல் நடத்துவதற்கு பவுலோக்கு பெரிதும் உதவியாக இருப்பவர் அனா.  உலகெங்கும் உள்ள உறுப்பினர்களுக்கு போஸ்ட்கிராசிங் பற்றிய அறிவிப்புகளை வலைப்பூவில் எழுதிவருகிறார். போஸ்ட்கிராசிங் இணைய தளத்தின் எடிட்டர் மற்றும் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் அழகான எழுதுபொருளுக்கு அடிமையானவர், முட்டைகளை விரும்பி சாப்பிடுபவர், தற்பொழுது போஸ்ட்கிராசிங் தலைமையக சமையலறையில் தலைமை சமையல்காரும் இவரே.

Wednesday, June 30, 2021

போஸ்ட்கிராசிங்கின் நிறுவனர்

 


போஸ்ட்கிராசிங்கின் பிதாமகன் பாலோ மாகல்ஹீஸ் (பவுலோ) - போர்ச்சுகல்

பவுலோக்கு நிறைய கடிதங்களை உலகம் முழுவதும் இருந்து பெறுவதற்கு மிகுந்த ஆர்வம். ஆனால் யார் தொடர்ந்து அனுப்புவார்கள். அதற்கு ஒரு தீர்வு காண விரும்பினார். அவரின் ஒரு சிறிய யோசனை இன்று ஆறு கோடி அஞ்சல் அட்டைகள் பயணமாவதற்கு காரணமாக இருந்துள்ளார். இப்போது இவர் இந்த போஸ்ட்கிராசிங் திட்டத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காவும் முழுநேரமாக பயணிக்கிறார். கம்ப்யூட்டரில் முன் உட்காராத நிலையில் புதையல்களைத் தேடுவதில் நேரத்தினை செலவு செய்கிறார்.

Tuesday, June 1, 2021

TEDx நிகழ்வில் போஸ்ட்கிராசிங்

 


2014 ஆம் ஆண்டில் போர்ச்சுகல்லில் உள்ள போர்டோவில் நடந்த TEDx நிகழ்வில் போஸ்ட்கிராசிங்கைப் பற்றிய ஒரு அறிமுக உரையை அனா வழங்கினார். வெளிநாடுகளில் இருந்து நமக்கு தெரியாய ஒருவரிடம் இருந்து ஒரு அஞ்சலட்டை நமக்கு வந்தால் எப்படியிறுக்கும். அதுவும் நமது பெயரைத்தாங்கி வந்துள்ள அஞ்சல் அட்டையைப் பார்த்தால், நாம் மிகவும் சந்தோஷம் அடைவோம் இல்லையா!

அன்றைய அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும், ஒரு அஞ்சல் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்தர். சற்றும் எதிர்பாராத வகையில், அன்றைய நிகழ்வில் அந்த அஞ்சல் அட்டையை அனைவருக்கும் கொடுத்தார். அனைவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. அந்த வீடியோவை இந்த தொடுப்பினை கிளிக் செய்து பார்க்கலாம்.

Sunday, May 23, 2021

யூரோபா அஞ்சல்தலைப் போட்டி 2021

இந்த ஆண்டின் மிக அழகான யூரோபா அஞ்சல் தலையைத் தேர்வு செய்யத் வாக்களிப்பு தொடங்கியது!

யூரோபா தபால்தலை என்பது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் (1956-1959) அஞ்சல் துறைகளால் பொதுவான வடிவமைப்பு அல்லது கருப்பொருளைக் கொண்ட அஞ்சல் தலைகளை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. இது 1992 வரை யூரோபா - சிஇபிடி என்றும் அழைக்கப்பட்டது.

இந்த ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழியும் ஆபத்தில் உள்ள தேசிய வனவிலங்குகளை மையப்படுத்தி அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு தேவையான மிக முக்கியமான தலைப்பாக இது கருதப்படுகிறது. காடுகள் அழிப்பு மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் இங்குள்ள விலங்குகள், பூஞ்சை மற்றும் தாவரங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது. மேலும் ஐ.யூ.சி.என் (IUCN) எச்சரிக்கை பட்டியலின் படி, ஐரோப்பாவில் தற்போது 20%க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. இது ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் சோகமான தகவலாகும். எனவே 2021ஆம் ஆண்டில், ஒவ்வொரு நாடும் ஆழிந்துவரும் உயிரினங்களைத் தேர்ந்தெடுத்து, அதை அஞ்சல் தலைகளாக வெளியிட்டுள்ளன. இங்கே அந்த அஞ்சல் தலைகளின் ஒரு சிறிய மாதிரி உங்கள் பார்வைக்காக:

 Photo Source: https://www.postcrossing.com

எல்லா அளவுகள் மற்றும் வடிவங்களிலும் விலங்கினங்களின் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளனர். அவை பெரும்பாலும் பாரம்பரிய தபால்தலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நம் அனைவருக்கும் கடினமானதே, ஏனென்றால் தவிர்க்க முடியாமல் அழகான விலங்குகளுக்கே அனைவரும் வாக்களிப்பார்கள்..

போஸ்ட்கிராசர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்த ஆண்டின் போட்டியில் எந்த முத்திரைக்கு 2021இன் சிறந்த யூரோபா அஞ்சல் தலைக்கான வாக்குகளை கொடுப்பார்கள்? தபால்தலை குறித்த உங்களின்  கருத்துக்களைக் அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள், எனவே உடனே நீங்களும் வாக்களித்து, நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை எங்களுக்கும் கருத்துப் பெட்டியில் தெரியப்படுத்துங்கள்!

2022 ஆம் ஆண்டின் கருப்பொருள்:  "கதைகள் & புராணக்கதைகள்"

தகவல் உதவி: https://www.postcrossing.com

Postcrossing Diary - 20