அனா காம்போஸ் (meiadeleite) - போர்ச்சுகல்
போஸ்ட்கிராசிங் இணைய தளத்தினை எந்த ஒரு தோய்வுமில்லாமல் நடத்துவதற்கு பவுலோக்கு பெரிதும் உதவியாக இருப்பவர் அனா. உலகெங்கும் உள்ள உறுப்பினர்களுக்கு போஸ்ட்கிராசிங் பற்றிய அறிவிப்புகளை வலைப்பூவில் எழுதிவருகிறார். போஸ்ட்கிராசிங் இணைய தளத்தின் எடிட்டர் மற்றும் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் அழகான எழுதுபொருளுக்கு அடிமையானவர், முட்டைகளை விரும்பி சாப்பிடுபவர், தற்பொழுது போஸ்ட்கிராசிங் தலைமையக சமையலறையில் தலைமை சமையல்காரும் இவரே.