Friday, October 1, 2021

போஸ்ட்கிராசிங்கின் தூண்கள்

 நிக்கி (shanaqui)– ஐக்கிய இராச்சியம்

நிக்கி இங்கிலாந்தில் இருந்து போஸ்ட்கிராசிங்கிற்கு ஆதரவு வழங்குவதோடு அதன் பராமரிப்பு பணிகளுக்கும் உதவி வருகிறார். புத்தகங்களை தனது சுவாமாக எண்ணுகிறார். அதற்காக தனியாக ஒரு இணைய தளத்தினை நடத்திவருகிறார். நீங்களும் அவருக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பிவைக்கலாம். தற்பொழுது முயல்களை வளர்த்து வருகிறார். பல்வேறு  பல்கலைக்கழக பட்டங்களை பெற்றுள்ளார். இதுவரை மூன்று பட்டங்ளைப் பெற்றுவிட்டு இன்னும் தொடர்ந்து படித்துவருகிறார்!.

ஓல்கா (kelpie) - ரஷ்யா

ரஷ்ய மொழி பேசும் போஸ்ட்கிரார்களை இணைக்க ஓல்கா உதவிவருகிறார். இவருக்கு திமிங்கலங்கள் மிகவும் பிடிக்கும். குக்கி எனும் கார்டூன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்.

 

 

உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

அஞ்சலட்டைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அப்படி மிகுந்த ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு உதவிகளை போஸ்ட்கிராசிங்கிற்கு தொடர்ந்து செய்துவருகின்றனர். பல தன்னார்வலர்களும் பல்வேறு பணிகளைப் பகிர்ந்து செய்து உதவி வருகின்றனர். போஸ்ட்கிராசிங்கில் பல்வேறு குழுக்கள் இயங்கி வருகின்றன. பல தன்னார்வலகளின் விலைமதிப்பற்ற உதவியுடன் அது பராமரிக்கப்படுகிறது - அவர்களைப் பற்றிய விபரங்களை ‘குழு’ (forum) பற்றிய பக்கத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம்.

குட்டி அஞ்சல் தூதர்கள் (Little Mail Carriers)

போஸ்ட்மேன் பாலோ மற்றும் போஸ்ட் வுமன் அனா ஆகியோர் உலகின் ஏதோ ஒரு நாட்டிற்கு சிறிய பொம்மை வடிவில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் போஸ்ட்கிராசிங்கின் குட்டி-தூதர்கள் எனலாம். தொடர்ந்து இந்த கரோனா காலத்திலும் உலகெங்கிலும் பயணம் செய்தார்கள். முடிந்தவரை உலகெங்குமுள்ள போஸ்ட்கிராஸர்களைப் பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர்! வலைப்பதிவில் இவர்களின் சாகசங்களைப் தொடர்ந்து பார்க்கலாம்.

Photo credits: Postcrossing Website and https://breathesbooks.com/

Postcrossing Diary - 20