Tuesday, January 28, 2025

TANAPEX: தபால்தலை கண்காட்சி

TANAPEX கேள்விப்பட்டுள்ளீர்களா? 14வது TANAPEX நாளை 29 ஜனவரி 2025 முதல் 1 பிப்ரவரி 2025 வரை சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற உள்ளது. 



TANAPEX என்றால் என்ன?

TA - Tamil

NA - Nadu

P - Philately

EX - Exhibition



மாநில அளவிலான இந்த கண்காட்சியில் உங்களின் Exhibit நுழைய நீங்கள் ஏற்கனவே மாவட்ட அளவிலான தபால்தலைக் கண்காட்சியில் வென்று இருக்க வேண்டும்.


அந்த வகையில் எனது ஐந்து frameகள் இந்த கண்காட்சியில் இடம் பெற உள்ளது. ஊடகம் தொடர்பாக 80, A4 பக்கங்களில் உலகம் முழுவதும் இருந்து வெளியிடப்பட்ட வானொலி, தொலைக்காட்சி, ஹாம் வானொலி, செயற்கைக்கோள் வானொலி, ஆண்டெனா, போன்றவற்றை மையப்படுத்திய தபால்தலைகள், முதல் நாள் கடித உறைகள், சிறப்பு அஞ்சல் உறைகள், Miniature Sheets, Traveled Envelopes போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளேன். 



அது மட்டுமல்லாது யாழினியும் தனது பங்கிற்கு, அச்சு மற்றும் நாளிதழ்களை மையப்படுத்தி 16 பக்கங்கள் கொண்ட ஒரு frameஐ காட்சிப்படுத்தியுள்ளார். எங்களைப் போன்று, இந்தியா முழுவதும் இருந்து பல சுவாரஷ்யமான தலைப்புகளில் 500க்கும் அதிகமான frameகள் இடம்பெற உள்ளது. 


கூடவே பல சிறப்பு அஞ்சல் உறைகள், அஞ்சலட்டைகள், சிறப்பு முத்திரைகள் வெளியிடப்பட உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருந்து பல முக்கிய தபால்தலை வியாபாரிகளும் கடைகளை அமைத்து விற்பனை செய்யவுள்ளனர். அவர்களிடம், உங்களுக்குத் தேவையான பழைய தபால்தலைகளை வாங்கிக் கொள்ளலாம்.


எனவே மறக்காமல், வரும் நான்கு நாட்களில், ஏதேனுமொரு நாள் வந்து கண்டு களிக்க அன்புடன் அழைக்கிறேன். அனுமதி இலவசம். மாலை வேலையில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு! 


 

Postcrossing Diary - 20