அஞ்சல் அட்டைகளின் ஊடாகச் சென்னையைப் எப்படிப் பார்க்கலாம்? சென்னை தினத்தினையொட்டி Madras through the Picture Postcards என்ற தலைப்பிலான கண்காட்சியை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறையில் ஏற்பாடு செய்திருந்தோம். இதில் 200க்கும் அதிகமான சென்னைத் தொடர்பான அஞ்சலட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தின் தலைவர் திரு.ரோலண்ட்ஸ் நெல்சன் இதனைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவரிடம் உள்ள பழமையான அஞ்சலட்டைகளைக் காண்பித்து உரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக 1906ல் வெளிவந்த அஞ்சலட்டை உட்படப் பல பழமையான அஞ்சலட்டைகள் பற்றி எடுத்துக்கூறியது வெகு சிறப்பாக இருந்தது.
துறைத் தலைவர் டி.ஆர்.கோபால கிருஷ்ணன் தன்னுடைய பேனா நண்பர்கள் அனுபவங்களையும், நாசாவுடன் தனக்கு இருந்த கடிதத் தொடர்புகளையும் விரிவாகப் பேசியது ஆச்சத்யமாக இருந்தது.
கண்காட்சியில் விஸ்வ வரூன் வரைந்த சென்னையின் முக்கியக் கட்டடங்களை மையப்படுத்திய 21 அஞ்சலட்டைகளை The Postcards Originalன் ஜெகதீஷ் வெளியிட்டு இருந்தார். அதிகம் கவனம் பெறாத இடங்களுக்கும் இம்முறை அஞ்சலட்டைகள் வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment