Saturday, August 24, 2024

சென்னையை மையப்படுத்திய அஞ்சலட்டைகள்

 

அஞ்சல் அட்டைகளின் ஊடாகச் சென்னையைப் எப்படிப் பார்க்கலாம்? சென்னை தினத்தினையொட்டி Madras through the Picture Postcards என்ற தலைப்பிலான கண்காட்சியை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறையில்   ஏற்பாடு செய்திருந்தோம். இதில் 200க்கும் அதிகமான சென்னைத் தொடர்பான அஞ்சலட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தின் தலைவர் திரு.ரோலண்ட்ஸ் நெல்சன் இதனைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவரிடம் உள்ள பழமையான அஞ்சலட்டைகளைக் காண்பித்து உரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக 1906ல் வெளிவந்த அஞ்சலட்டை உட்படப் பல பழமையான அஞ்சலட்டைகள் பற்றி எடுத்துக்கூறியது வெகு சிறப்பாக இருந்தது.

துறைத் தலைவர் டி.ஆர்.கோபால கிருஷ்ணன் தன்னுடைய பேனா நண்பர்கள் அனுபவங்களையும், நாசாவுடன் தனக்கு இருந்த கடிதத் தொடர்புகளையும் விரிவாகப் பேசியது ஆச்சத்யமாக இருந்தது.

கண்காட்சியில் விஸ்வ வரூன் வரைந்த சென்னையின் முக்கியக் கட்டடங்களை மையப்படுத்திய 21 அஞ்சலட்டைகளை The Postcards Originalன் ஜெகதீஷ் வெளியிட்டு இருந்தார். அதிகம் கவனம் பெறாத இடங்களுக்கும் இம்முறை அஞ்சலட்டைகள் வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.































Tuesday, April 9, 2024

The postcard reignited memories of Tranquebar



A delightful postcard recently arrived from Tranquebar (தரங்கம்பாடி), postmarked with a colorful Indian stamp. It was sent by Surya, a talented cinematographer I met through some mutual friends in the film industry.


The postcard reignited memories of my own trip to Tranquebar several years ago with Palainivel, a friend who now dxer in radio and resides in Kanchipuram. During that visit, we explored the historic town, and I was particularly drawn to the Tranquebar Association. They had a captivating display of books on local history and culture, and I couldn't resist picking up a few.

Tranquebar Branch Post Office Cancellation


They also offered a charming selection of postcards, like the one Surya sent me. Interestingly, the Archaeological Survey of India (ASI) also maintained a stall within the fort, showcasing their fascinating "Tarangampadi Excavation & Conservation Report." It seems Tranquebar continues to be a treasure trove of cultural and historical gems.

Tuesday, March 19, 2024

மஞ்சள் அஞ்சல் அட்டை

 

மஞ்சள் அஞ்சல் அட்டையில் என்னவெல்லாம் செய்யலாம்?

தொடர்ந்து  Yellow Postcard Artஐ ஊக்குவித்து வருபவர் கடையநல்லூர் ஜெயராம்.ஜி. இதில் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்துள்ளார். சமீபத்தில் அவர் அனுப்பிய இந்த அஞ்சல் அட்டைக்கு முகவரித் தேவைதில்லை. பார்த்தவுடன் பசக் என மனதில் ஒட்டிக்கொள்ளும் கார்ட்டூன்.

காமன் மேன் (பொது சனம்) என்பது இந்திய எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான ஆர்.கே.லக்ஷ்மனால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரம். அவ்வளவு அழகாக அந்த பாத்திரத்தினைப் படைத்திருப்பார்.

ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக, காமன் மேன் சராசரி இந்தியனின் நம்பிக்கைகள், அபிலாஷைகள், பிரச்சனைகள் மற்றும் ஒருவேளை குறைபாடுகளை கூட தினசரி காமிக் ஸ்ட்ரிப் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.

இது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தொடர்ந்து வெளிவந்தது. இந்த பொது சனம் 1951இல் தொடங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த பாத்திரம் ஒரு கட்டுச்சோற்று பொட்டலத்தினை கட்டிச்செல்வது போன்ற ஒரு படத்தினை ஆர்.கே.எல் வரைந்திருப்பார். நண்பர் ஜெயராம், அதனை அப்படியே  வானொலிப் பெட்டியாக மற்றிவிட்டார். பார்க்கவே அழகாக உள்ளது. அந்த பெரியவரின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி உண்மையிலேயே நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நன்றி Jaya Ram சார்!

#


Handlooms of India

India Post has officially immortalized the nation’s rich textile legacy with a stunning set of four commemorative postage stamps dedicated t...