மஞ்சள் அஞ்சல் அட்டையில் என்னவெல்லாம் செய்யலாம்?
தொடர்ந்து Yellow Postcard Artஐ ஊக்குவித்து வருபவர் கடையநல்லூர் ஜெயராம்.ஜி. இதில் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்துள்ளார். சமீபத்தில் அவர் அனுப்பிய இந்த அஞ்சல் அட்டைக்கு முகவரித் தேவைதில்லை. பார்த்தவுடன் பசக் என மனதில் ஒட்டிக்கொள்ளும் கார்ட்டூன்.
காமன் மேன் (பொது சனம்) என்பது இந்திய எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான ஆர்.கே.லக்ஷ்மனால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரம். அவ்வளவு அழகாக அந்த பாத்திரத்தினைப் படைத்திருப்பார்.
ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக, காமன் மேன் சராசரி இந்தியனின் நம்பிக்கைகள், அபிலாஷைகள், பிரச்சனைகள் மற்றும் ஒருவேளை குறைபாடுகளை கூட தினசரி காமிக் ஸ்ட்ரிப் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
இது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தொடர்ந்து வெளிவந்தது. இந்த பொது சனம் 1951இல் தொடங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த பாத்திரம் ஒரு கட்டுச்சோற்று பொட்டலத்தினை கட்டிச்செல்வது போன்ற ஒரு படத்தினை ஆர்.கே.எல் வரைந்திருப்பார். நண்பர் ஜெயராம், அதனை அப்படியே வானொலிப் பெட்டியாக மற்றிவிட்டார். பார்க்கவே அழகாக உள்ளது. அந்த பெரியவரின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி உண்மையிலேயே நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நன்றி Jaya Ram சார்!
#
No comments:
Post a Comment